உள்நாடு

தாதியர் சங்கத்திற்கு சுகாதார அமைச்சரிடமிருந்து கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தொடரும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வரும் அரச தாதியர் சங்கத்தினருடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார வல்லுநர்கள் சம்மேளனம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது எட்டப்படும் தீர்வுகளை பொறுத்தே பணிப்புறக்கணிப்பின் எதிர்காலம் அமையும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

editor

குருநகரில் மினி சூறாவளி – கட்டடங்களின் கூரைகள் சேதம் – கடற்றொழில் அமைச்சர் நேரில் விஜயம்

editor

தந்தை ஜனாதிபதியானால் மகனால் ஜனாதிபதியாக முடியுமா – நாமல்.