உள்நாடு

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று(28) அதனை எதிர்த்து தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுமார் ஒரு மணி நேரம் மின்வெட்டு

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !

பெற்ற கடனை மீள் செலுத்த கால அவகாசம்