சூடான செய்திகள் 1

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் மேற்கொண்டுவரும் 48 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைகிறது.

தாதிய சேவையில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர் உட்பட, நிர்வாக அதிகாரிகள் தீர்வு வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது…

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது