உள்நாடு

தாதியரின் சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து 3 தாதியர் சங்கங்கள் நேற்று ஆரம்பித்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்றும் தொடர்கிறது.

அரச தாதி அதிகாரிகளின் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக நேற்றைய தினம் வைத்தியசாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பித்திருந்தன.

எவ்வாறாயினும், திடீர் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளதாக அந்த தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

நாளை ரஞ்சனுக்கு போது மன்னிப்பு : உறுதியாக நம்புகிறேன் [VIDEO]

சாதாரண தர பரீட்சை முடிவுகளும் மாணவர்களுக்கான அறிவிப்பும்

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்