அரசியல்உள்நாடு

தவறு செய்திருந்தால் பொறுப்பேற்க தயார் – ஜனாதிபதி ரணில்

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உணவு மற்றும் மருந்துகளை வழங்க முடியாமல் அவதியுறும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தவறாக இருந்தால், அதனை பொறுப்பேற்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொத்துவிலில் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா”  மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் `இயலும் ஸ்ரீலங்கா’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு மக்கள் பேரணி அம்பாறைபொத்துவில் ஜலால்தீன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு அங்கிருந்த மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைந்து கொண்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

“நான் திருடர்களுடன் வேலை செய்தேன் என்று சஜித் கூறுகிறார். பேராசைப்பட்டு இந்த பதவியை எடுத்தேன் என கூறுகின்றார்.

அவருக்கான பதவியை நான் பறித்தேன் என்றும் கூறுகிறார். அவர் எப்போதும் ஏழைகளைப் பற்றி பேசுகிறார். எனவே அவருக்கு அந்த வருத்தம் புரியவில்லையா?” என்றார்

Related posts

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு

வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பம்