உள்நாடுபிராந்தியம்

தவறுதலாக மாத்திரைகளை உட்கொண்ட 1 ½ வயது குழந்தை பலி – முல்லைத்தீவில் சோகம்

முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்டதில் 1 ½ வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது

குறித்த பகுதியை சேர்ந்த அன்டனி சஞ்யித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்புபற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் 1 ½ வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது

நேற்று (04) மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது

Related posts

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 277 பேர் கைது