கேளிக்கை

தளபதி 64’ படத்தின் பெயர் வெளியானது

(UTVNEWS | INDIA) –நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்ப பிடிப்புகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்டிரியா, கைதி படத்தின் வில்லன் காளிதாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கத்தி படத்தை தொடர்ந்து இராண்டாவது முறையாக விஜயின் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், கர்நாடக மாநிலம் ஹிமோகாவிலும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி தயாரிப்பாளர் டுவிட்டர் பக்கத்தில் இருந்து தளபதி 64 படத்திற்கான ப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிசம்பர் 31 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பு ஏற்கனவே விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவலை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக தெரிகிறது.

Related posts

பிரியங்கா சோப்ரா மனிதாபிமான விருதுக்கு தெரிவு

நடிகர் சசி கபூர் காலமானார்

கொரோனா ஊடுருவலால் டாம் குரூஸ் படப்பிடிப்பு நிறுத்தம்