கேளிக்கை

தளபதிக்கு சவால் விடுத்த தெலுங்கு நடிகர்

(UTV|இந்தியா) – தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

அவருக்கு சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட அனைத்துத் திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்தில் நேற்று முதலே அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு #GreenIndiaChallenge-ல் பங்கேற்றுள்ளார் மகேஷ் பாபு.

மரக்கன்றை வைக்கும் வீடியோவை வெளியிட்டு மகேஷ் பாபு தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

“எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தரும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி ஒரு அடி. இந்த முன்னெடுப்பைச் செய்யும் எம்.பி சந்தோஷ்குமாருக்கு நன்றி” என்று மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

தற்போது மகேஷ் பாபு விடுத்திருக்கும் இந்தச் சவாலை விஜய் ஏற்பாரா என ரசிகர்கள் மத்தியில் கல்வி எழுந்துள்ளது. ஏனென்றால், இதேபோன்று #BeTheRealMan சவாலை சிரஞ்சீவி, ரஜினிக்கு விடுத்திருந்தார். அதை ரஜினி செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், மகேஷ் பாபு விடுத்திருக்கும் சவாலை விஜய் ஏற்றால், அது தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பிரபலமாகும் என்று நம்பப்படுகின்றது.

Related posts

செல்வராகவனின் மரண மொக்கை ஓடிடியில்

இன்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட்

பாலிவுட் நடிகை சொனாக்ஷிக்கு பிடியாணை