கேளிக்கை

‘தலைவி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

(UTV |  இந்தியா) – சமீபத்தில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வந்தனர் என்பதும் இந்த படத்தை விஜய் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏப்ரல் 23ஆம் திகதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் எனும் டிரெயிலர் வரும் மார்ச் 23 ஆம் திகதி இப்படத்தில் ஜெயலிதா வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் பிறந்தநாள் தினத்தன்று வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த படம் நல்ல வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது

Related posts

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்

‘சர்தார்’ கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது

சார்மி எடுத்த அதிரடி முடிவு…