உள்நாடு

தலைமைக்கு வஜிர’வை முன்மொழிவு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான விசேட செயற்குழுக்கூட்டம் இன்று(10) இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகியது. இதனடிப்படையில் செயற்குழுக்கூட்டத்தில் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும், இதில் வஜிர அபேவர்தனவுக்கு தலைமையை வழங்கி தேசியப்பட்டியலையும் வழங்க காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுக் குழுவினர் நேற்றைய தினம் கடிதம் ஒன்றினையும் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்!

குழந்தைகள் மத்தியில் உயிராபத்துமிக்க ‘மிஸ்ஸி’

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்