விளையாட்டு

தலைக்கனமான இந்திய வீரர்கள்-விளாசிய இங்கிலாந்து முன்னாள் வீரர்

(UTV|COLOMBO)-லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

இதனால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஜெப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணி வீரர்களின் பேட்டிங் முட்டாள்தனமாக இருந்தது. ‘அவுட் சுவிங்கர்’ வீசினால் யோசனை இல்லாமல் பேட்டை கொண்டு செல்வதா? முரளிவிஜய் ஆடிய விதம் மிகவும் மோசமான செயலாகும். இங்கிலாந்து ஆடுகளம், தட்பவெப்பநிலை ஆகியவற்றை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணிக்க தெரியவில்லை.

இந்திய அணி இங்கிலாந்துக்கு அலட்சியத்துடனும், தலைக்கனத்துடனும் வந்தது. எங்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்டப்படி பேட்டிங் செய்ய முடியும் என்ற நினைப்பில் இருந்தனர். டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளவில்லை.

போதிய பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை, இதன் மூலம் இந்திய வீரர்கள் இதுவரை தங்களையும், தங்களது ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

டெஸ்ட் பந்து வீச்சாளர் தரிவரிசை பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம்

மெஸ்ஸியை பின்தள்ளிய சுனில் ஷேத்ரி

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்