உலகம்

தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விமானம் – 17 பேர் காயம்

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் தரையிறங்கும் போது பனிப்புயலில் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானிகளால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 17 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 76 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்டா விமான சேவைக்கு சொந்தமான விமானம் கனடாவின் மினியாபோலிஸ் விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எதிர்வரும் சில மாதங்களில் கொரோனாவுக்கு டாட்டா

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிப்பு