உள்நாடு

தற்போதைய நெருக்கடி 1974ம் ஆண்டு காரணமல்ல – பொன்சேகா

(UTV | கொழும்பு) –   நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு 74 வருட ஆட்சியின் பொது இடம்பெற்ற தொன்றல்ல என்றும், 2019 ஆம் ஆண்டு ஊடகங்கள் ஊடாக உயர்த்தப்பட்ட ஒரு நபருக்கு பொதுமக்கள் வாக்களித்ததன் காரணமாக உருவாக்கப்பட்டது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைவாக இருந்ததாக முகநூலில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ரொட்டி ஒன்றின் விலை ரூபா 50 ஆகவும், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1350 ரூபாவாகவும், சீமெந்துப் பொதி ஒன்றின் விலை 850 ரூபாவாகவும் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு லீற்றர் டீசல் ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரு கிலோ அரிசி ரூ.100க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது என்றார்.

குறைந்த பட்ச பஸ் கட்டணம் ரூபா 12 என பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

எனவே இது 74 வருட பிரச்சினையல்ல என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Related posts

தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இரத்ததான நிகழ்வு

editor

ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அழைப்பு