அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை கிடைத்ததும் மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய IMF திட்டத்திற்கு செல்வதாக கூறினாலும், தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையில் சென்று, அவர் முன்வைத்த உடன்படிக்கையை முன்னெடுத்து வருகிறது. நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை தூக்கி எறிந்துவிட்டு IMF தாளத்துக்கு ஆடும் அரசாக மாறியுள்ளது.

இதனால் நாட்டு மக்களுக்கு விடிவு கிட்டாது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று(27) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடுகிறது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் செயற்பட வேண்டும், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வருகிறோம்.

6% இல் இருந்து 36% ஆக காணப்படும் வரி சூத்திரத்தை 1-24% ஆகக் குறைப்பதாக வாக்குறுதியளித்தோம். இதனை செய்ய முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் சட்டகத்திற்குள் இருந்தவாறு இந்த விடயங்களை செய்ய முடியும்.

என்ற போதிலும் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடிவருகிறன்றது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்த விடங்களை அரசாங்கம் செய்வதாக இல்லை.

வருமானத்தை அதிகரிப்பதற்கு ஒரே வழி வரியை அதிகரிப்பது மட்டும் அல்ல, வரி வலையில் சிக்காதவர்களையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். வரி அறவீட்டை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இதனை டிஜிட்டல் மயமாக்கவும் முடியும். தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் தெரிவித்த விடயங்களை அதிகாரம் கிடைத்தும் செய்தபாடில்லை. மின் கட்டணத்தைக் குறைப்பதாகச் சொன்னாலும் இன்னும் அதைச் செய்யவில்லை.

எரிபொருள் விலை குறித்து பேசிய பேச்சுக்கு எரிபொருள் விலையை பெருமளவு குறைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய இவர்கள் இன்று அவற்றை நிறைவேற்ற முடியாமல் தடமாறி வருகின்றனர்.

குறைகளைக் கண்டு கொண்டே வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

அரசாங்கத்தின் குறைகளையும் தவறுகளையும் சுட்டுக்காட்டுவது வெறுமனே காழ்புணர்வுக்காக அல்ல, அரசாங்கத்திடம் இவற்றை சுட்டிக் காட்டி மக்களுக்கு சேவையாற்றவே இதனை சொல்லுகிறோம்.

பெரும் மக்கள் ஆணையைப் பெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது அது குறித்து அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மக்களின் மனதை வெல்வதற்காக தேர்தல் மேடைகளில் சொன்னவற்றைச் செய்ய முடியாமல் தற்போதைய அரசாங்கம் ஒருவித மயக்கத்தில் இருந்து வருகிறது. மக்கள் ஆணையை மறந்துவிட்டு செயற்பட்டு வருகிறது என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்டத்தை ஏன் முன்வைக்க முடியாது.

இந்த அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதனை முன்வைத்த பாடில்லை. பிற்போகும் சாத்தியப்பாடு காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்வோம்.

தேர்தல் மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைக் கூட தற்போதைய அரசாங்கம் வகுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய பட்டியல் நியமணம் குறித்து பின்னர் கூறுகிறேன்.

கட்சியின் எதிர்காலம் குறித்து மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி வருகிறோம். தேசிய பட்டியல் நியமணம் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுப்போம். கட்சியின் தீர்மானங்கள் கட்சிக்கு அமைவாக எடுக்கப்படுமே தவிர ஏனையவர்களின் விருப்பத்திற்கு அமைய அல்ல என சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்

Related posts

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

editor

ஊரடங்கு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்