உள்நாடு

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV|கொழும்பு) – தற்போது 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 26 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தப்பட்ட 4507 பேர், தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடைந்த பின்னர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை, இந்தியாவின் மும்பையில் இருந்து வந்த 116 பேர் இராணுவம் மற்றும் கடற் படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியா கொயம்புத்தூரில் இருந்து வந்த இலங்கை மாணவர்கள் அரச அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் உட்பட 133 பேர் முப்படையினரால் நிர்வாகிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. .

Related posts

இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல்