உள்நாடு

தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் 76 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட 23 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார்.

Related posts

மஹிந்த, நாமலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – ரோஹித்த அபேகுணவர்தன

editor

பதிவு செய்தலுக்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பம்

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு