உள்நாடு

தற்காலிக சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானம் செய்துள்ளது.

காலத்தை நீடிக்க வேரஹெர அலுவலகத்திற்கோ அல்லது அவர் வசிக்கும் மாவட்டத்தின் மாவட்ட அலுவலகத்திற்கோ செல்லலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் புதிய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே சாரதி உரிம அட்டையை வழங்க மோட்டார் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட 450,000 சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் அட்டைகள் அடுத்த சில வாரங்களில் நாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூர் மதுபானங்களுக்கு புதிய செயலி

இளம் ஊடகவியலாளர்களுகான கதை கூறும் “மோஜோ” பயிற்சி

கொழும்பு பங்குச் சந்தை நாளை பூட்டு