உள்நாடு

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 02 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இருந்த அட்டை தட்டுப்பாடு காரணமாக தற்போது குவிந்து கிடக்கும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களின் கையிருப்புகளை முடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]