உள்நாடு

தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை கையளிக்குமாறு அறிவிப்பு

பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீண்டும் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்

ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் தொடர்பான சட்டமூலம்

மற்றுமொரு சிறுவர் கடத்தல் முயற்சி : அக்குறணையில் சம்பவம் – பெற்றோர் கருத்து!