உள்நாடு

 தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை !

(UTV | கொழும்பு) –    தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பதீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022.12.18 நடைபெறவிருக்கும் தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபரோ அல்லது நிறுவனமோ தடை உத்தரவை மீறி செயற்றப்பட்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

BREAKINGNEWS | பதவியை இராஜனமா செய்த சமிந்த விஜேசிறி!

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் ஆரம்பம்