உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு பணிகள் நேற்று முன்தினம் (08) ஆரம்பமானதாகவும், இந்த மதிப்பீட்டு பணிகள் 12 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்போது, முதலாவது வினாத்தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியானம் சம்பவம் உயர் நீதமன்றம் வரை முன்னெடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளுக்கமைவான வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குதல், 3 கேள்விகளையும் குறைத்தல் மற்றும் முழு பரீட்சையை மீண்டும் நடத்துதல் ஆகிய மூன்று பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரையைத் தேர்ந்தெடுக்குமாறு உயர் நீதிமன்றம் பரீட்சைகள் ஆணையர் நாயகத்துக்கு உத்தரவிட்டது.

இதற்கமைவாக, பரீட்சையின் முதல் வினாத்தாளில் வெளியானதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் மதிப்பெண்களை இலவசமாக வழங்க பரீட்சைகள் திணைக்களம் கடந்த முதலாம் திகதி தீர்மானித்தது.

அதன்படி, அந்த மூன்று கேள்விகளுக்குமான புள்ளிகளை வழங்குவதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரிஷாத் ஒருபோதும் தீவிரவாத்தில் ஈடுபடமாட்டார் – மங்கள

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது