சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான சில ஆலோசனைகள்

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த பரீட்சையில் நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
விடையளிக்கையில் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என்றும்  ஆணையாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மூவாயிரத்து 50 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இதில் மூன்று இலட்சத்து 55 ஆயிரத்து 326 பேர் தோற்றுகின்றார்கள். நாடெங்கிலும் 497 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலாவது வினாத்தாளுக்கு 45 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளுக்கான பரீட்சை 9.30ற்கு ஆரம்பமாகும். இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை முற்பகல் 10.45 தொடக்கம் நண்பகல் 12.00 வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
ஓவ்வொரு பரீட்சார்த்தியும் வினாத்தாளின் இடதுபக்க மேல் மூலையில் தமது பரீட்சை சுட்டெண்ணை தெளிவாக எழுத வேண்டும். பென்சிலையோஇ நீல நிற அல்லது கறுப்பு நிற பேனாவையோ பயன்படுத்தி விடையளிக்க முடியும். விடையளிக்கையில் உரிய ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என ஆணையாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெற்றோர் நேர காலத்துடன் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பது அவசியமாகும். இடைவேளையின் போது பெற்றோர் பரீட்சை  மண்டபத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிள்ளைகளுக்கு இலேசாக சமிக்கக்கூடிய உணவையும் தண்ணீர் போத்தலையும் வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

பாடகர் அமல் பெரேர மற்றும் அவரது புதல்வரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு