கேளிக்கை

தம்பி வா, தலைமை ஏற்க வா

(UTV | சென்னை) – விஜய்யின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யை ஆட்சி செய்ய வருமாறு ஸ்டாலின் அழைப்பது போன்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

விஜய்யின் 47வது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில் அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே கொண்டாடத்தை துவங்கிவிட்டனர்.

விஜய்யின் விதவிதமாக போஸ்டர்களை பிரபலங்களை வைத்து வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இது தவிர்த்து விஜய்யை வாழ்த்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகிறார்கள்.

விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரை வருங்கால முதல்வரே, தமிழகத்தின் எதிர்காலமே என்று சொல்லி ரசிகர்கள் போஸ்டர் அடிப்பது வழக்கமாகிவிட்டது. அவர்கள் விஜய்யை முதல்வராக பார்க்க ஆசைப்பட்டு போஸ்டர் அடிப்பதில் தவறு எதுவும் இல்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூட முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் செங்கோலை விஜய்யிடம் கொடுத்து, ஏழைய எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா, தலைமை ஏற்க வா என்று சொல்வது போன்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.

விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது. அதற்காக அவர் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த யாரும் வேறு கட்சிகளில் சேர வேண்டாம், நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தன் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

விஜய் எப்பொழுது கட்சி ஆரம்பிப்பார் என்று காத்திருக்கும் ரசிகர்கள், இப்படி ஒரு போஸ்டரை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்கள்.

கெரியரை பொறுத்த வரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 65 படத்திற்கு டார்கெட் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

டைட்டில் வெளியானதும் அதை ட்விட்டரில் டிரெண்டாக்கவிட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related posts

‘காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா

சல்மான் கானுக்கு சிறை – ரூ.600 கோடிக்கு சினிமா வர்த்தகம் பாதிக்கும்

ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை : ஷெர்லின் சோப்ரா