அரசியல்உள்நாடு

தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்த சம்பந்தன் – மாவை, சுமந்திரனிடம் வெளிப்படுத்தினார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், சம்பந்தன் ஐயாவை நேரில் ஒருதடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்நிலையில், அவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சம்பந்தமாக மூன்று விடயங்களை சுட்டிக்காட்டினார்.

முதலாவதாக, நாங்கள் தொடர்ச்சியாக தமிழாகள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிற்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துவருவதோடு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, பொதுவேட்பாளர் விவகாரம் ஒஸ்லோ உடன்பாட்டை மீறுவதாக அமையும். ஏனென்றால் ஒஸ்லோ உடன்பாட்டில் இலங்கை அரசாங்கம் சமஷ்டி அடிப்படையிலான பேச்சுக்கு தயார் என்றே கூறியுள்ளது. ஆகவே பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதன் ஊடாக அந்த ஒப்பந்தத்தினை தூக்கியெறிந்து செயற்பட முடியாது.

மூன்றாவதாகரூபவ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கை இணைப்புச் செய்வதாக இருந்தால் வாக்கெடுபபைச் செய்ய வேண்டும்.

எனினும் அவ்வாறு வாக்கெடுப்பைச் செய்வதாக இருந்தால் கல்லோயாத் திட்டம் உள்ளிட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். ஆகவே கிழக்கு மாகாணாத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் மீளக்குடியேற்றப்பட்டதன் பின்னரேயே வாக்கெடுப்பை நடத்த முடியும்.

அவ்விதமான சந்தர்ப்பங்களை விடுத்து பொதுவேட்பாளர் தெரிவுக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தனது நிலைப்பாட்டினை மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் ரியபர்படுத்தியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Related posts

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

editor

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

மேல் மாகாண தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்