அரசியல்உள்நாடு

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து சுமந்திரன் செயற்படுவார்

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழு பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை நியமித்து உள்ளமையினால் அவர் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.

எனினும், தமிழரசு கட்சியினுடைய ஊடக பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயல்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts

கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி

மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி