அரசியல்உள்நாடு

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு தாக்கல் – இரா. சாணக்கியன்

இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது.

இம்முறை எமது கட்சியானது மட்டக்களப்பில் மக்களின் ஆணையுடன் அதி கூடிய வாக்குகளை பெற்று அதிகளவான ஆசனங்களை பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில்
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன், மட்டு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் இளைய தம்பி ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்னபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட 8 பேர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

இவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள வேட்பு மனுதாக்கல் செய்யும் காரியாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Related posts

கொரோனா தொடர்பில் போலியான தகவலை வழங்கிய ஒருவர் கைது

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்