உலகம்

தமிழகத்தில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை

(UTV | இந்தியா) –  இந்தியாவில் சென்னை உட்பட 17 இடங்களிலும் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

சென்னை உட்பட 17 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முடிவடைந்தது. இந்த ஒத்திகை வெற்றி அடைந்தது. இதையடுத்து அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசி

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பு

கஷோகி கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை