உள்நாடு

தப்பிக்க முயற்சித்த கொலைக் குற்றவாளி கைது!

(UTV | கொழும்பு) –

பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று மாலை பெண்ணொருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரென்டிக்ஸ் : பதிவு செய்யாத ஊழியர்கள் கைது செய்யப்படுவர்

நிதியமைச்சர் தலைமையில் புதிய குழு

மார்ச் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி