உள்நாடு

 தப்பிக்க பாய்ந்த இளைஞன் சில்லில் சிக்க்கி பரிதாபமாக உயிரிழப்பு

(UTV | எம்பிலிபிட்டிய ) –  தப்பிக்க பாய்ந்த இளைஞன் சில்லில் சிக்க்கி பரிதாபமாக உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞர் உயிர் தப்ப வெளியே பாய்ந்த போது பஸ்ஸின் சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 17 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் இவ் விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

சுற்றுலா துறையில் ஏற்படப்போகும் புதிய மற்றம்!

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு