உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான மூன்றாம் நாள் இன்று(15) இடம்பெறுகின்றது.

இதன்படி, அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இன்று(15) இரண்டாவது நாளாகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் பாதுகாப்புப் பிரிவினரும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை!

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு