உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று(14) இடம்பெறுகின்றது.

இதற்கமைய, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் இன்றும்(14) நாளையும்(15) வாக்களிக்க முடியுமென குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், பொலிஸார், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2020 பொதுத் தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணத்தை மறந்த தேரர்.

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது

வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு ஆலோசனை வகுப்புகள்