உள்நாடு

 தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

(UTV | கொழும்பு) –  தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

​​எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30, 31ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளையதினம் (09) திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு உகந்த திகதியாக எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) அறிவித்திருந்தது.

இதற்கமைய, உள்ளூராட்சி சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளுக்கமைய, ஏப்ரல் 25ஆம் திகதியை புதிய தேர்தல் திகதியாக ஒவ்வொரு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் அறிவிப்பார்கள் என,தேர்தல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இளம் ஊடகவியலாளர்களுகான கதை கூறும் “மோஜோ” பயிற்சி

சாய்ந்தமருது அரசியல் மேடையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – கலகமடக்கும் பொலிசார் களத்தில்

editor

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்