உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  எதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. )

தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படும் திகதிக்கு முன்னர் இந்த மனு மீதான விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர்கள் இடையீட்டு மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என கட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு சீன நிறுவனங்கள் விருப்பம்!

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு