உள்நாடு

தபால் மூல வாக்களிப்புக்கான இறுதித் திகதி இன்று

(UTV | கொழும்பு) – தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று(28) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம், ராஜகிரிய தேர்தல்கள் செயலகம் என்பவற்றுக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கையளிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விண்ணப்பங்களை கையளிப்பதற்காக வேறு தினம் வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்வேறு விடயங்கள் பிரதமர் ஹரிணியின் கவனத்திற்கு | வீடியோ

editor

IMF கடன் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்