உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

புத்தளத்தில் பெறுமதியான பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி – 6 இளைஞர்கள் கைது

editor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

editor