உள்நாடு

தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு இன்றும் சந்தர்ப்பம்

(UTV | கொழும்பு) – தபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் வாக்குகளை அளிக்காதவர்களுக்கு இன்றும் (20) நாளையும் (21) வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், ராஜாங்கனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அங்கு முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் சந்தர்பம் அளிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மெனிங் சந்தைக்கு பூட்டு

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை