உள்நாடு

தபால் மூலம் மருந்து பொருட்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

(UTV|கொழும்பு ) – நிறை அல்லது தூரத்தை பொருட்படுத்தாது 75 ரூபாவுக்கு வீட்டிற்கே மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் கிளினிக்கிற்காக பதிவுசெய்துள்ள நோயாளர்களுக்கு மாத்திரமே இவ்வாறு மருந்துப்பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

தாம் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கு கிளினிக் இலக்கம் , பெயர் , முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை கூறும் பட்சத்தில் உங்களின் மருந்துகள் பொதி செய்யப்பட்டு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.

சில சந்தர்ப்பங்களில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் ஒருவர் அவிசாவளையில் இருக்கக்கூடும். அவ்வாறானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று, உங்களின் கிளினிக் புத்தகத்தை காண்பிக்க வேண்டும். அப்போது குறித்த வைத்தியசாலையின் ஊடாக மருந்துப்பொருட்கள் வழங்கப்படும் என வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிபிலை மற்றும் மெதகம பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவ முகாம்களை நடத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வைத்தியசாலைகளுக்குள் நோயாளர்கள் கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தொலைபேசி கட்டணங்கள் உட்பட தகவல் தொடர்பாடல் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

நாளைய ரயில்வே பணிப்புறக்கணிப்பு இரத்து

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு