அரசியல்உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவடைகிறது. தகுதிப் பெற்றுள்ளவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க வேண்டும். இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை அரச சேவையாளர்களில் 712,321 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தனர்.

திட்டமிட்ட வகையில் தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவடையும். 22 தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் பிரிவுகளில் இருந்து பாரதூரமான முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. இந்த மூன்று நாட்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு 11ஆம் திகதி இன்றும், 12ஆம் திகதி நாளையும் வாக்களிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

தபால்மூல வாக்களிப்புக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நாளையுடன் நிறைடைகிறது. இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆணைக்குழு புதிதாக ஒன்றும் குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்புக்கு இம்முறை 736, 586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24,286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய இம்முறை 712, 321 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

இன்றைய மின்வெட்டு அட்டவணை

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பதவிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திருந்தால் வழக்கு