சூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளின் 53 வகையான மருத்துவ நடவடிக்கைகளுக்கான விலை நிர்ணயம் அடுத்து வாரம்

(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளின் சத்திர சிகிச்சை, இரசாயன பரிசோதனை, பிரசவம் உட்பட 53 வகையான மருத்துவ நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் தொடர்பான விலை நிர்ணயமானது அடுத்து வாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

தனியார் வைத்தியசாலைகளின் விலை நிர்ணயம் தொடர்பான சுற்றறிக்கையை விரைவாக அமைத்து தருமாறு சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அனில் ஜயசிங்கவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த அறிக்கை இன்னும் இரண்டு தினங்களுக்குள் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் குறித்த விலை நிர்ணயங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

லண்டன் செல்லும் விஜயகலா