உள்நாடு

தனியார் பேருந்துகளின் பயண தடவைகளை குறைக்கத் தீர்மானம்

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்ற பயணிகளின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் குறைவடைந்துள்ளதால் தனியார் பேருந்து போக்குவரத்தை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நாளைய தினம் முதல் சில மார்க்கங்களினூடாக பேருந்து போக்குவரத்தினை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பேருந்துகளின் பயண தடவைகளையும் நூற்றுக்கு 50 வீதமாக குறைக்கவுள்ளதுடன் நாளையும், நாளை மறுதினமும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் பயணிகளின் வருகையை அடிப்படையாக வைத்து தீர்மானம் எடுக்கப்படுமென என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அடுத்த வருடம் 06 மணிநேர மின் வெட்டை சந்திக்க நேரிடும்!

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்