சூடான செய்திகள் 1

தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)-தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று (15) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

பிரதான நகரிங்களிலும் பஸ் போக்குவரத்து பாரியளவில் குறைவடைந்துள்ளது.

கொழும்பு பிரதான பஸ்தரிப்பிடத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளிலும் தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் அதிகரிக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்தபட்ச அபராதத்தை 500 ரூபா வரையிலும் அபராத பத்திரத்திற்கு அதிகபட்சமாக 3,000 ரூபா வரை அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டிற்குள் நிலவும் வாகன நெரிசல், சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அமைய, புதிய அபராதம் காரணமாக தாம் சிரமத்தை எதிர்கொள்வதாக தனியார் பஸ் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 7 பேர் பிணையில் விடுதலை

பொரள்ளை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்