உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் தனியார் நிகழ்வுகளில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதால், எதிர்காலத்தில் தாம் தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மருத்துவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

வட மாகாணத்தில் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இனவாத கொள்கையற்ற தமிழர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் – உதய கம்மன்பில.