வகைப்படுத்தப்படாத

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO)-தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் என்பவற்றை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தேர்தல் தினத்தில் நடைபெறுகின்ற விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் காரணமாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த நிலமைகளை கருத்திற் கொண்டு தேர்தல் தினத்தன்று நடத்தப்படுகின்ற விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பகுதி நேர வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Water cut for several areas on Friday

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது- முற்றுகை நடவடிக்கை ஆரம்பம்

பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழப்பு