உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 718 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 61,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 2,082 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 1,258 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆழிப்பேரலைக்கு 16 ஆண்டுகள் பூர்த்தி

கட்டுநாயக்க – ஆடைத்தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது