(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,414 ஆக அதிகரித்துள்ளது.