உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 48,244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 41,000 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மேல்மாகாண எல்லைகளின் 14 இடங்களில் நேற்றைய தினம், 3,956 வாகனங்களில் பயணித்த 5,985 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிக்க முற்பட்ட 76 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

   

Related posts

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்