உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப் பகுதியில் 325 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 46,260 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று கொழும்புக்கான 14 நுழைவாயில்களில் 3,337 வாகனங்களில் பயணித்த 6,549 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவற்றில் 75 வாகனங்களில் பயணித்த 170 பேர் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீற முயற்சித்தமைக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலேயே உள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பவர்களைத் தவிர தனிநபர்கள் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

    

Related posts

புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களை PTA விதியின் கீழ் கைது செய்யவில்லை

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று