உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மேலும் 298 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு) யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் இன்று(09) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தனிமைப்டுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று(09) காலை அங்கிருந்து வெளியேர அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

சுங்க அதிகாரிகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் கடமை

editor

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ