உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு)- 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேருக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பூசா தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட இலங்கை கடற்படையை சேர்ந்த 25 பேர் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 84 பேர் பூசா முகாமில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பூசா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் 249 பேர் இதுவரை அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

Related posts

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

20ம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்