உள்நாடுசூடான செய்திகள் 1

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மேலும் 533 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 533 பேர் நேற்று(09) வீடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் மே 08 மற்றும் 09 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் சாம்பூர், ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் மே 08 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதேவேளை, முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் 39 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4428 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை : இதுவரை 20 பேர் பலி

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்